சூழ்நிலை திருடன் -circumstnce thief(short story))

சூழ்நிலை திருடன்-circumstnce thief

ஊருக்கு நடுவே உள்ள ஆலமரத்தடியில் ஊர் மக்கள் அனைவரும் அமர்ந்து கொண்டிருந்தனர் அந்தக் கூட்டத்துக்கு நடுவே இளைஞர் ஒருவனும் வயதானவர் ஒருவரும் எதிரெதிர் திசையில் நிற்கின்றனர். ஊர் மக்கள் அமைதியாக இருக்கும் வேலையில் ஊர் தலைவர் அந்த முதியவரைப் பார்த்து ம் ம் ம்… என்னப்பா உன் பிரச்சனை என்று முதியோர் பார்த்து கேட்கிறார். அதற்கும் முதியவரும் ஐயா எங்க தோட்டத்தில் இருந்த வேப்பமரத்தை இந்த பையன் வெட்டிடான் என்று எதிரே இருக்கும் இளைஞரைப் பார்த்து சொல்றாரு, முதியவர் பேசுவதைக் கேட்ட இளைஞன் உடனே தலைவரைப் பார்த்து ஐயா நான் எப்ப இவங்க தோட்டத்தில் இந்த மரத்தை வெட்டினேன், இவர் சும்மா என் மேல் பழி போடுகிறார் என்று பதட்டத்துடன் சொல்கிறான்.தலைவருக்கு அருகே இருந்த ஒருவர்  திருடன் என்னைக்கு நான் தான் திருடினேன் அப்படின்னு உண்மையே ஒத்துகிட்டு இருக்கான். அவன் பதட்டமா இருக்கிறதை பார்த்தா தெரியலையா இவன் தான் மரத்தை வெட்டி இருப்பான் என்கிறார். உடனே பஞ்சாயத்து தலைவர் யோவ் நீ சும்மா இரு, நீ சொல்லிய எத வச்சு இவன்தான் மரத்தை வெட்டிருப்பான்னு சொல்ற ஏதாவது ஆதாரம் இருக்கா என்று முதியவரைப் பார்த்து கேட்கிறார். அதற்குமுதியவரும் நேத்து என் தோட்டத்தில் இவன பார்த்தேன் அந்த மரத்தடியில் ரொம்ப நேரமா இருந்திருக்கா இதுவரைக்கும் என் தோட்டத்துக்கு பக்கம் வராதவன் நேத்து வந்திருந்தான் அதனால் இவன் மேல தான் எனக்கு சந்தேகம் என்று சொன்னதும், அந்த இளைஞன் ஐயா நான் திருடல  அவ்ளோ பெரிய மரத்தை வெட்டி நான் என்ன பண்ண போறேன், இவங்க என் மேல வீண்பழி போடுறாங்க என்று அழாதகுறையாக கத்தி கூச்சல் போடுகிறான். பஞ்சாயத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பஞ்சாயத்து தலைவரும் ஏய் எல்லாரும் அமைதியா இருங்கப்பா என்று சத்தம் போடுபவர்களை அடக்குகிறார். ஊர் மக்கள் அமைதியாக அப்போது இளைஞன் ஒருவன் பஞ்சாயத்து சபை முன் வந்து ஐயா இவன் திருடல அந்த மரத்தை வெட்டியது நான்தான் எனக்கு தண்டனை கொடுங்க அவன் எந்த தப்பும் பண்ணல அப்படின்னு சொன்னவுடனே ஊர் மக்கள், ஊர் தலைவர் என எல்லோரும் அந்த இளைஞரை ஆச்சரியமாக பார்க்கின்றனர். முதலில் பலி சுமத்தப்பட்ட இளைஞன் அப்பாடா நான் தப்பிச்சண் டா சாமி என்பதுபோல் நிம்மதி பெருமூச்சு விடுகிறான். “பிறகு ஊர் தலைவர் திருடியதை ஒப்புக் கொண்ட இளைஞனை பார்த்து நீயே திருடியதை போட்டுக்கொண்டுதாள உனக்கு குறைந்த தண்டனை தான் ஆனால் எதுக்காக திருடன அதை சொல்லு என்று கேட்கிறார். அதற்கு அந்த இளைஞன் ரொம்ப சாதாரணமா அது ஒன்னும் இல்லையா எனக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை என்று டாக்டர் சொன்னாங்க அதனால வேப்ப மரக் காத்து அரை மணி நேரம் சுவாசித்தால் நல்லதுன்னு சொன்னாங்க எங்க வீட்டுல எந்த வேப்பமரம் இல்லை, அதனால் இவங்க தோட்டத்தில் இருந்த மரத்தை வெட்டி எடுத்துட்டு போய் எங்க விட்டானா வச்சுக்கிட்டேன் என்று வெகுளியாக சொல்லவும்’, அவன் அப்படி பேசியதை பார்த்து ஊரே சிரிக்கின்றது. அதில் சிலர் இவன் என்ன பைத்தியமா இருப்பானோ என்றெல்லாம் சொல்லி கேலி கிண்டல் செய்கின்றனர். தலைவரும் அவனைப் பார்த்து ஏண்டா முட்டா பய மவனே மரத்தை நட்டு வளர்த்தால் ஆக்சின் கிடைக்குமா? இல்ல வளர்ந்த மரத்தை வெட்டி கொண்டுபோய் உன் வீட்டு கிட்ட வச்சிக்கிட்டா ஆக்சிஜன் கிடைக்குமா? என்று சொல்லி சிரித்தவர், அந்த மரத்தை வெட்டியதற்கு பதிலா இந்த அரசமரத்தடியில் கொஞ்ச நேரம் உக்காந்துட்டு போயிருக்கலாமே என்று கேட்கிறார். அதற்கு அந்த இளைஞன் இந்த மரத்தை தான் வெட்டலாமா என்று பார்த்தேன் ஒரு ஆளு எப்படி வெட்ட முடியும் அதனால தான் அந்த சின்ன வேப்பமரத்தை வெட்டி எடுத்துட்டு போனேன்  என்கிறான். பஞ்சாயத்தில் இருந்த சிலர் அவனை திட்டுகிறார்கள், இன்னும் சிலர் நீ என்ன பைத்தியமா என்று பேசுகிறார்கள். அதையெல்லாம் காதில் வாங்காத அவன் எதிரே இருக்கும் முதியவரைப் பார்த்து அவர் தோட்டத்தில் வெட்டின மரத்துக்கு என்ன நஷ்டஈடு கேளுங்கள் தரேன் என்கிறான். பஞ்சாயத்து கூடி முடிவெடுத்து ஆயிரம் ரூபாய் அந்த முதியவரிடம் தரும்படி அந்த இளைஞரிடம் சொன்னதும் அந்த இளைஞரும் அப்பொழுது பணத்தை தந்து விடுகிறான். அதன் பிறகு ஊர் மக்கள் அனைவரும் கலைந்து செல்கின்றனர். மீண்டும் ஒரு மாதம் கழித்து அதேபோல் அந்த கிராமத்தில் நடக்கிறது. குற்றம் சாட்டப்பட்டு பஞ்சாயத்து நடுவே ஒருவன் நிற்கிறான். பஞ்சாயத்தார் உண்மையை விசாரிக்கவே அந்த நபரும் நான் திருடவில்லை என்கிறான். அந்த வேளையில் முதலில் மரத்தை வெட்டியதாக ஒப்புக்கொண்ட இளைஞன் மீண்டும் பஞ்சாயத்து முன்னே வந்து நான்தான் திருடினேன் என்று சொல்லி பஞ்சாயத்து முன் நஷ்ட ஈடு கொடுத்துவிட்டு செல்கிறான்.

ஊரில் இதேபோல் தொடர்ந்து திருட்டு நடக்கிறது. அந்த திருட்டு எல்லாம் இந்த இளைஞனே ஒப்புக் கொள்கிறான். அதேபோல் இன்னும் ஒரு சில இளைஞர்களும் தாமாக முன்வந்து திருடியதை ஒப்புக் கொள்கிறார்கள்.ஒரு கட்டத்தில் பஞ்சாயத்தார் கூடி நம்ம ஊரில் இனி யாருடைய பொருள் களவு போனாலும் திருடியவர்கள் தானாக முன்வந்து திருடியதை ஒப்புக் கொள்வார்கள். இந்த முடிவை பஞ்சாயத்து எதற்காக எடுத்தது என்றால் இதுவரை திருடியது ஒருவன், திருடுபோன பொருளுக்கு சொந்தக்காரன் திருடியதாக குற்றம்சாட்டப்பட்டது ஒருவனாக இருக்கிறது ,அதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது இது ஊர் மக்கள் அனைவருக்கும் சம்மதமா என்று கேட்கிறார். அதற்கு ஊர் மக்கள் அனைவரும் சம்மதம் தெரிவிக்கின்றனர்.

அதன் பிறகு ஒரு வருடத்தில் அந்த ஊரில் திருடு போனதாக எந்த ஒரு புகாரும் ஊர் தலைவருக்கு போனதில்லை. தலைவரும் நல்ல முடிவுதான் எடுத்திருக்கோம் என்று சந்தோஷப்படுகிறார்.

மீண்டும் சில மாதங்கள் கழித்து ஒருவர் தன்னுடைய ஆட்டுக்குட்டி ஒன்று இல்லை என்று பஞ்சாயத்தை கூட்டுகிறார். பஞ்சாயத்து தலைவரும் ஊர் மக்களிடம் யாராவது இவனோட ஆட்டுக்குட்டியை திருடி இருந்தா நீங்களா வந்து உண்மையை ஒத்துக்கோங்க என்கிறார். ஆனால் ஊர் மக்கள் யாரும் திருடியதாக சொல்லவில்லை, அதன் பிறகு தலைவர் ஆட்டுக் குட்டிக்கு சொந்தமானவரை பார்த்து மேய்ச்சலுக்கு போன இடத்தில நரி ஏதாவது புடிச்சிருக்கா இல்ல வேற ஆட்டு மந்தைகள்ஓட போய் இருக்கானு பாரு என்று சொல்லி அனுப்புகிறார் .

அதன் பிறகு அந்த ஊரில் ஆடு ,மாடு, வாகனம் என பல திருட்டு நடைபெறுகிறது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மக்கள் அனைவரும் ஒன்று கூடி பஞ்சாயத்தை கூட்டி ஐயா நம்ம ஊர்ல என்ன நடக்குதுன்னு தெரியலையா ஆடு, மாடு ,வண்டி என எல்லா போல திருடு போயிட்டு இருக்கு ஊரே வெறிச்சோடிப் போய்க் கிடக்குயா என்று முறையிடுகிறார்கள். சிலர் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் தரலாம் என்றார்கள். ‘அப்பொழுது திருப்புமுனையாக முதலில் தானாக முன்வந்து திருடியதை ஒப்புக்கொண்ட இளைஞன்  தலைவர் இடம் சென்று ஐயா நான் ஏதோ சின்ன சின்ன திருட்டுகள் செய்து கொண்டிருந்தேன், ஆனால் இப்போ என்னடான்ன நான் நினைச்சது ஒண்ணு நடப்பது ஒன்றாக இருக்கிறது என்று சொன்னதும் தலைவரும் ,ஊர் மக்களும் குழம்பிப்போய் நிற்கின்றனர். அவன் சொல்வதை கெட்ட தலைவரும் நீ என்னப்பா சொல்ற எங்களுக்கு ஒன்னும் புரியல, கொஞ்சம் புரியும்படியா சொல்லு என்று கேட்கின்றனர். அப்பொழுது அந்த இளைஞன் ஐயா ஆரம்பத்தில் நம்ம ஊர்ல திருடு போன பொருளுக்கு எல்லாம் திருடியது வேற யாரோ ஆனா நான் திருடியதாக ஒப்புகொண்டேன். இதையெல்லாம் நான் ஏன் ஒப்பு கொண்டேன் அப்படின்னு நீங்க யோசிக்கலாம் . அப்பதான் நீங்களும் நான் நெனச்ச மாதிரியே நம்மள திருட்ட ஒத்துகிட்டா  திருடுவது ஒருத்தன் திருட்டு பழி சுமத்துவது ஒருத்தன் சும்மா ஒருவன் மீது வீன்பலி சுமத்தினால் அவன் மனம் வருந்தும், அதனால இப்படி ஒரு தீர்மானம் போடுவாங்கன்னு எதிர்பார்த்தேன் அதேபோல் இனி திருடியவன் தாமாக முன் வந்து திருட்டை ஒப்புக் கொள்வான் என்று சொன்னீர்கள். அதை எனக்கு சாதகமாக பயன்படுத்தி தேவைக்காக சின்ன சின்ன பொருள் திருடினேன்’.”அப்பொழுது கூட்டத்திலிருந்த ஒருவர் அப்பவே சொன்னேன் இல்ல இப்படி ஒரு தீர்மானம் போட்டோ இப்படி நடக்கும்னு இன்னைக்கு ஊரே வெறிச்சோடி கிடக்கு என்று சொன்னதும், அதைக்கேட்டு தலைவர் இத அப்பவே என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல எல்லாரையும் கேட்டு தானே முடிவெடுத்தேன் என்கிறார். நானும் சொன்னங்க ஆனா நீங்க அதை காது கொடுத்து கேக்கல என்று சொன்னதும், அதைக் கேட்ட தலைவர் அவரைப் பார்த்து நீ சத்தமா சொல்லி இருக்கணும் நீ சொன்னது என் காதில் விழவில்லை என்கிறார். ஐயா இந்த அந்த கடைசில இருந்த ஆறுமுகம் அண்ண காதுல விழுந்தது, அன்னைக்கு உங்க முன்னாடி தான் இருந்த ஆனாலும் உங்க காதுல விழல, விழாது ஏன்னா! பதவியில் இருக்கும் உங்களுக்கு பெரிய மனுஷங்க என்ற போர்வையில் பக்கத்தில் இருக்க பணக்காரங்க சொல்றது மட்டும் தான் காதில் விழும், எங்கள மாதிரி பாமர மக்கள் சொல்வது உங்க காதில் விழாது என்கிறான். அப்போது தலைவருக்கு அருகே அமர்ந்திருந்த சிலர் கோபம் அடைகின்றனர். ஆனால் தலைவருக்கு அவன் சொன்னது செருப்பால் அடித்தது போல் இருந்தது. சரி இப்படி எல்லாம் நடக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல இந்த தவறுக்கு முழுப்பொறுப்பும் நான்தான் அதனால ஊர் சபையில் முன் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன், இப்போ என்ன பண்ணலாம் என்பதை நீயே சொல்லு என அந்த விவசாயிடம் கேட்கிறார்.அவர் இளைஞரைப் பார்த்து இவன் அவனுடைய தேவைக்காக  சூழ்நிலையை உருவாக்கிவிட்டு திருடி இருக்கான் ஆனால் இந்த சூழ்நிலையை சிலர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு திருடி இருக்காங்க, இப்போ என்னுடைய தேவை சின்னச் சின்ன பொருள் தான் ஆனால் சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அவர்களின் தேவை பெரிதுயா என்று சொல்கிறார். உடனே ஊர் மக்கள் அதெல்லாம் இருக்கட்டும் அப்போ ஊர்ல இருக்க ஆடு மாடெல்லாம் யார் திருடி இருப்பாங்க அதை சொல்லு என்கின்றன. நம்ம ஊர்ல இப்படி ஒரு தீர்மானம் போட்டிருக்கிறது  நம்ம பக்கத்து ஊர்ல இருப்பவர்களுக்கும் இல்ல வெளியூர் மக்களுக்கு இந்த விஷயம் தெரிந்திருக்கும் அவர்கள் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டார்கள், வெளியூரிலிருந்து வந்த திருடனுக்கு இந்த ஊர் மக்கள் எப்படி நாசமான போனா அவனுக்கு என்ன, அவன் என்ன இந்த ஊரில் பிறந்தவனா என்கிறார். என்னடா குழப்புற தெளிவா சொல்லு என தலைவருக்கு அருகே இருந்த ஒருவர் கேட்கவும். உடனே இவர் உள்ளூர் திருடன் ஊரு நல்லா இருக்கணும் தானும் நல்லா இருக்கணும் அப்படி நினைப்பான் ஏன்னா மொத்தத்தையும் திருடிட்டா  ஊர்ல ஒன்றுமே இருக்காதுஆனால் வெளியூர் திருடன் திருடபோன ஊர் எக்கேடு கெட்டு போன நமக்கு என்ன நம் என்ன அந்த ஊரிலேயே பிழைக்கவா போறோம் என ஊரில் உள்ள அனைத்தையும் திருடத்தான் நினைப்பான்”, இதுதான் இப்போ நம் ஊரில் நடந்திருக்கு என்று சொல்லி முடிப்பதற்குள் கூட்டத்தில் ஒருவன் எது எப்படியோ ஊரே வெறிச்சோடிப் போய் கிடக்கு திரும்பவும் எல்லாம் சரி செய்ய என்ன செய்ய போறோம் என்று விரக்தியுடன் கேட்கிறான். அதற்கு அவரும் இதுவரை நம்ம ஊர்ல திருடு போன பொருள் எல்லாமே ரோட்டு பக்கத்துல இருக்க வீட்டு முன்னாடி கட்டி இருக்க ஆடு மாடு தான் திருடு போய் இருக்கு அப்படின்னா அந்தத் திருடனை புடிக்கணும் அப்படின்னா மீண்டும் நாம ரோடு பக்கத்துல இருக்க வீட்டு பக்கத்துல ஆடு மாடுகளை கட்டிவைத்து விட்டு நம்ம ஊரை சுற்றி எல்லையிலே இருக்க எல்லா ரோட்டிலே நம்ம ஊரு ஆளுங்க காவல் இருந்து அந்த திருடர்களை புடிக்கணும் என்று சொன்னதும் ஊர் மக்களும் ஒருமனதாக ஏற்றுக்கொள்கின்றனர்.

அவர் சொன்னது போல அடுத்த நாளே சங்க கால நிலை ரோட்டோரம் இருக்கும் ஒரு வீட்டின் முன் மாட்டை கட்டிவைத்துவிட்டு அந்த இரவு ஊரிலிருந்து ,ஊருக்கு வெளியே செல்லும் வலியின் அருகே இருக்கும் வயல்களில் இளைஞர்களும் பெரியோர்களும் பதுங்கி இருக்கிறார்கள். நள்ளிரவும் ஆனது, ஊருக்குள் ஒரு மினி ஆட்டோ ஒன்று நுழைகிறது இவர்கள் யாரும் ஏதும் செய்யாமல் பார்த்துவிட்டு அமைதியாக இருக்கின்றனர். பின்பு சற்று நேரம் கழித்து அந்த ஆட்டோ அதே வழியில் மீண்டும் திரும்பி வருகிறது, மக்கள் அனைவரும் ஆட்டோவை தடுத்து நிறுத்துகின்றனர் . உடனே திருடர்கள் ஆட்டோவை பின்புறமாக திருப்ப முயற்சி செய்கின்றனர், ஆனால் அதற்குள் மக்கள் ஆட்டோவை சுற்றிவளைத்தனர்.ஆட்டோவில் பின்பக்கம் பார்த்தாள் இரண்டு மாடுகள் இருக்கின்றன, திருடர்களை கையும் களவுமாக பிடித்து அந்த இரவு ஊரில் கட்டி வைக்கின்றனர். அடுத்த நாள் காலை இதுவரை அவர் திருடிய பணத்தில் சம்பாதித்த அத்தனை பொருளையும் தருமாறு ஊர் மக்கள் அவர்களிடம் கேட்கின்றனர். திருடர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர். உடனே இருவர் திருடர்களின் கன்னத்திலும் வயிற்றிலும் கடுமையாக தாக்குறாங்க முகமெல்லாம் ரத்தம் வழிகிறது அதன் பிறகு உண்மையை ஒப்புக் கொண்டு திருடிய அத்தனையும் திருப்பி தருவதாக சொன்ன பின்பு அடிப்பதை நிறுத்தினார்கள். சொன்னதுபோலவே திருடர்களும் அந்த ஊரில் திருடியவற்றை எல்லாத்தையும் விற்று சம்பாதித்த பணத்தை எல்லாம் திருப்பி தந்து விடுகிறார்கள்.

 

இரா மணிவண்ணன்..

 

 

 

 

 

 

 

Leave a Reply