வயக்காடு (சிறுகதை)-agriculture land short story

                                             வயக்காடு (சிறுகதை)

நான் நகரத்தில் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன் ,வார விடுமுறை நாளை கழிக்க என்னுடைய கிராமத்திற்கு செல்வது வழக்கம் கிராமத்திற்கு சென்றதும் என்னுடையகிராமத்திற்கு சென்றால், என் நண்பன் பாபு போடு விளையாடச் செல்வது வழக்கம்.பாபுவை பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவனும் நானும் பள்ளிப்படிப்பை ஒன்றாகப் படித்தவர்கள் இப்பொழுது அவன் ஊரிலேயே விவசாயம் செய்து வருகிறான். என்னுடைய கிராமத்திற்கு சென்றதும் நேராக பாபுவை காண அவன் வீட்டுக்குச் சென்றேன். அவன் என்னடான்னா நான் வந்தது கூட பார்க்காமல் மேஸ்திரிகளோடு பரபரப்பா வேலை செய்து கொண்டிருந்தான். என்னடா பாபு பரபரப்பா வேலை செய்ற அப்படின்னு கேட்டேன் , யாருப்பா அது திடீர்னு பக்கத்துல வந்து பேசுறது என்றபடியே திரும்பி பார்த்தவன்,டேய் வேலு எப்படா வந்த நீதான ஊருக்கு வந்தவன் போன் பண்ணி இருக்கலாம் இல்ல என்று புன்னகையுடன் கேட்டான். இப்பதாண்டா வந்தேன் வந்ததும் வீட்டுக்கு போய்ட்டு நேரா உன்ன பாக்கதாண்டா வந்தேன் என்று நான் பேசிக்கொண்டிருக்கும்போதே மேஸ்திரி ஒருவர் என்னை பார்த்து தம்பி கொஞ்சம் தள்ளி நில்லு பா என்று சொன்னதும் நானும் கொஞ்சம் தள்ளி நின்றேன். உடனே மேஸ்திரியும் அவரின் தோல் மீது இருந்த கருங்கல்லை என்னருகே போட்டார். நான் மீண்டும் என் நண்பனிடம் பேச்சுக்கொடுத்தேன் “என்னடா பாபு திடீர்னு வீடு எல்லாம் கட்ட ஆரம்பிச்சிட்ட அவ்வளவு பணம் இருக்கா என்று கேட்டேன். அதற்கு அவன் அவ்வளவு பணம் எல்லாம் இல்லடா என்று சலித்துக் கொண்டான். பிறகு எப்படி வீடு கட்ட பேஸ்மென்ட் போடுற ஏதாவது வீட்டு ஏதாவது லோன் வாங்கிட்டியா இல்ல கடன் வாங்கி இருக்கியா என கேட்டேன். லோனா விவசாயிகளுக்கு விவசாயம் பண்ணவே லோன் தரமாட்டாங்க இதுல வீடு கட்ட லோன் தருவாங்களாடா என்று நக்கலாக கேட்டான். அவன் அப்படி சொன்னதும் நான் ஒன்றும் புரியாதவனாய் அவனிடம் மீண்டும் கேட்டேன் ,பிறகு எப்படிடா  லோன் வாங்கல கடனும் வாங்கல ஆனால் வீடு கட்ட பணம் எப்படி வந்தது, விவசாயத்தில் பணம் வரவும் வாய்ப்பே இல்லை பிறகு எப்படி வீடு கட்ட முடியும் ,அப்போ நீ கட்டாயம் கடன் வாங்கி இருக்கஉனக்கு இப்போ கடன் வாங்கி வீடு கட்ட வேண்டிய அவசியம் என்னடா வந்தது, வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியுமா என்றேன். அதற்கு அவன் சொன்னான் நான் எப்படா சொன்னேன் கடன்வாங்கி இருக்கேன் என்று என்னிடம் கேட்டான். அவன் அப்படி சொன்னதும் எனக்கு ஒன்றுமேஒன்றுமே புரியவில்லை  மீண்டும் அவனிடம் கேட்டேன் அப்புறம் எப்படிடா வீடு கட்ட இவ்வளவு பணம் வந்தது, மாதம் நாற்பதாயிரம் சம்பாதிக்கிற என்னாலேயே வீடுகட்ட முடியல, இங்கேயே இருக்க உன்னால எப்படி வீடு கட்ட முடியும் என்று கேட்டேன். அதற்கு அவன் சொன்னான் டேய் வேலு லோன் வாங்கல கடன் வாங்கல ஆனாலும் வீடு கட்ட காசு எங்க இருந்து வந்தது அவ்வளவுதானே உன்னோடட சந்தேகம் வயக்காட்ட வித்துட்டேன்டா என்று ரொம்ப சாதாரணமாக சொன்னான். டேய் காடு வாங்கி விவசாயம் பாக்க போறியா? சொல்லுடா ராஜா என்ன பண்ண போற சொல்லுடா முட்டாள் என்றேன். பாபு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். நான் கொஞ்சம் சத்தம் போட்டு வேற பேசிட்டேன் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கொத்தனார் எல்லாம் என்னையே பார்த்து மீண்டும் சிரித்து கொண்டிருந்தனர், நான் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்தேன். இங்க பார்ரா பாபுநான் ஒரு உண்மையை சொல்லட்டுமா என்னோட வேலை பார்க்கும் நண்பன் ஒருத்தனுக்கு பொண்ணு பாக்குறாங்க அவனுக்கு பொண்ணு வீட்ல என்ன சொல்றாங்க தெரியுமா? கம்பெனில வேலை பார்க்கிற சரி ஆனால் சொந்தமாக விவசாய பூமி வேண்டுமே அப்படின்னு கேக்குறாங்க , அவன் எங்க போய் விவசாய பூமி வாங்க முடியும், அதுவும் அவன் வாங்கும் சம்பளத்துக்கு அதுவே  அவன் என்ன நினைக்கிறான் தெரியுமா? உன்ன மாதிரி வயக்காடு இருந்தா அதை என்னடா காலங்காலமாக விவசாயம் பண்ண காட்ட வித்துட்டேன்னு ரொம்ப சாதாரணமா சொல்ற என்று கோபமுடன் கேட்டேன். எதுக்குடா இவ்வளவு டென்ஷன் ஆகுற அமைதியா இருடா என்று சொன்னான் , நான் இப்போ காட்ட வித்து வீடு கட்ட வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டேன். அதற்கு அவன் தங்குவதற்கு வீடு வேண்டுமே என்றான். அதான் ஏற்கனவே வீடு இருக்கே என்றேன். உடனே பாபு என்னடா அந்த குடிசை வீட்லயா என்று சொல்லி  சிரித்தான் , அவன் சிரிப்பதைப் பார்த்து அங்கே. அவன் அப்படி சொல்லி வேலை செய்துகொண்டிருந்த எல்லோரும் சிரித்தார்கள் .ஏண்டா குடிசை வீட்ல தூங்குறது கேவலமா, ஏன் குடிசை வீட்ல தூங்கினா தூக்கம் வராதா என்று கேட்டேன். அதற்கு அவன் தூங்கினா தூக்கம் வருது ஆனா……. என்று ராகம் இழுத்தான் , என்னடா ராகம் இருக்குற விஷயம்  என்னன்னு சொல்லு அப்படின்னு கேட்டேன். கொஞ்ச நேரம் அமைதியா இருந்தான். நான் மீண்டும் கேட்டேன்.பிறகு சொன்னான் நான் குடிசை வீட்டில் இருக்கிறதால யாரும் பொண்ணு தர மாட்டேங்குறாங்க அதனாலதான் அம்மாவே காட்ட வித்திட்டு வீட்டைக் கட்டி கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டாங்க அதனால தான் இப்போ கல்யாணம் பண்ண வச்சிருந்த காச பேஸ்மென்ட் போட்டு வைக்கலாம் வயக்காட்ட வாங்கினவங்க காசு கொடுத்தா அப்படியே வீடு கட்டலாமே அப்படின்னு வேலை செய்கிறோம்னு  சொன்னா அப்படி சொன்னதும் எனக்கு கோபம் வந்துடுச்சு ஏண்டா உனக்கெல்லாம் அறிவே இல்லையா? பெரியவங்க அவங்கதான் வெளியுலகம் தெரியாம இருக்காங்க உனக்குமா அறிவு இல்ல, நீ வீடு கட்டிட்டா உடனே பொண்ணு உங்க வீட்டுக்கு வந்து என்ன கல்யாணம் பண்ணிக்கோ மாமானு சொல்லிடுவாங்க? இல்ல பொண்ன பெத்தவங்க தான் மாப்ள காட்ட வித்து வீட்டைக் கட்டிடருன்னு பொண்ணு தருவாங்களா?, நீ இப்படி நெனச்சுக்கிட்டு செய்றது எல்லாமே மிகப் பெரிய தப்புடா என்று சொன்னேன். செய்றது இதுல என்னடா தப்பு இருக்கு அப்படின்னு பாபு கேட்டான். அதுக்கு நான் கேட்டேன் இப்ப பொண்ணு வீட்டுக்காரங்க உனக்கு வீடு இல்லைன்னு சொல்றாங்க அதனால நீ வீட்டை கட்டுர, டேய் நாளைக்கு வீட்டைக் கட்டி முடிச்சுட்டு நீ போய் பொண்ணு கேட்டா வீடு இருக்கு ஆனா படிப்பு இல்லையே சரி படிப்பு இல்லன்னாகூட பரவாயில்லை சொந்தமா பிசினஸ் பண்றாரா? இல்ல விவசாயம் பண்றாரா? அப்படின்னு கேள்விமேல் கேள்வி கேப்பாங்க அப்ப நீ என்ன செய்வ ராஜா? சொந்தமா பிசினஸ் பண்ண போறியா? இல்லன்னா காலேஜ் படிக்க போறியா? இல்ல காட்ட வித்து வீடு கட்டின மாதிரி வீட்டை வித்து வச்சி வாழலாமே அப்படின்னு அவனுக்கு தோணும்,., இதிலிருந்து என்ன தெரியுது ஆக மொத்தம் பொண்ண பெத்தவங்க பலபேர் அவங்க பொண்ணு எந்த வேலையும் செய்யாமல் சொகுசா வாழனும்னு நினைக்கிறாங்க , அவ்வளவு ஏன் எனக்கு உன்ன மாதிரி வயல் இருந்தா வேலைக்கு போகாம இங்கே விவசாயம் பண்ணிக்கிட்டு இருந்திருப்பேன் என்று சொன்னேன்” அதற்கு அவன் எதுவுமே பேசாம சிரித்தான் அதன்பிறகு அவனை அவனைப் பார்த்து இங்க பார்ரா பாபு ஒன்னு மட்டும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ                                                                                                                                                                      ”வயக்காட்டை விற்று வருங்கால மனைவிக்காக வானுயர வீடுகட்டி வைத்தாலும்…                                                                                                                                                                                                                                          நாளை உன் மனைவிக்கு பசி என்று வந்தால் கட்டிய வீட்டின் கல்லை உன்ன முடியாது”                                                                                                                என்று சொன்னேன். அதற்கு அவன் கவித கவித என்று சொல்லி சிரித்தான், அவன் சிரிப்பதைப் பார்த்து அங்கே வேலை செய்து கொண்டிருந்த அத்தனைபேரும் சிரித்தார்கள் அப்படி அவர்கள் சிரிக்க , பாபு இது கவிதை இல்லை இது என்னோட கருத்துன்னு கூட வெச்சுக்கோ நீங்க சிரிக்கிறது பத்தி எனக்கு கவலை இல்லை ஆனால் நான் சொன்னது கட்டாயம் நடக்கும் அப்போ தெரியும் என்னோட அருமை அப்படின்னு அவன் மூஞ்சி அடிக்கிற மாதிரி சொன்னேன். அதன் பிறகு பாபு ஓட அம்மாவும் வந்தாங்க என்ன பாத்ததும் என்னப்பா எப்படி இருக்க ஆள பாத்து ரொம்ப நாள் ஆகுது முன்ன மாதிரி வீட்டுப்பக்கம் கூட வர மாட்ற அப்படின்னு கேட்டாங்க, எங்கம்மா நான் வாராவாரம் வந்துட்டு இருக்கேன் உங்கள தான் பார்க்க முடிய எப்படிமா இருக்கீங்க அப்படின்னு நலம் விசாரித்தேன். அம்மாவும் எனக்கு என்பா நல்லா இருக்கேன் நீங்க நல்லா இருந்தா போதும் அப்படின்னு சொன்னாங்க. எனக்கு என்ன அம்மா நல்லா தான் இருக்கேன், ஆனா உங்க பையனோட வாழ்க்கைதான் நல்லா இருக்காது அப்படின்னு சொன்னேன். அதுக்கு அவங்க ஏம்பா இப்படிலாம் பேசுற அப்படின்னு எதுவும் தெரியாதா அப்பாவியாக கேட்டாங்க . நான் பின்ன என்னமா அவனுக்கு தெரிஞ்சது விவசாய வேலை மட்டும் தான் அந்த வேலையே இல்லாமல் பண்ணிட்டா நாளைக்கு அவன் எப்படி வாழ முடியும் அதனாலதான் அப்படி சொன்ன , நான் பேசியதில் ஏதாவது தப்பா இருக்காம்மா? என்று கேட்டேன். அதற்கு அவங்க எங்களை வேற என்னதாம்ப்பா செய்ய சொல்ற எங்களுக்கு வேற வழி தெரியல, எங்க போய் பொண்ணு கேட்டாலும் வீடு இல்ல, வீடு இல்ல, அப்படின்னு சொன்னா என்னதான் பண்றது அதனால் தான் நிலத்தை வித்துட்டு வீடு கட்டலாம் அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணலாம்னு நானே தான் சொன்னேன் நிலத்தையும் வித்துட்டோம் அப்படின்னு சொன்னாங்க. ஏம்மா வயசுல பெரியவங்க நீங்களே இப்படி சொல்லலாமா, உங்க காலத்துல எல்லாம் வீட்ட பார்த்துதான் கல்யாணம் பண்ணாங்களா? நீங்க இந்த குடிசை வீட்டில் வாழவே இல்ல, என்னம்மா யார் எது சொன்னாலும் கேப்பீங்களா? சொல்றவங்க ஆயிரம் சொல்லுவாங்க அதையெல்லாம் கேட்டுகிட்டு இருந்தா நாம வாழவே முடியாது..ஆனா ஒன்னு மட்டும் உறுதியா சொல்வேன் நீங்க பகல் கனவு கண்டுகிட்டு இருக்கீங்க வீட்டை கட்டி முடிச்ச உடனே நம்ம புள்ளைக்கு கல்யாணம் ஆகிடும்னு நினைக்கறீங்க ,ஆனா அதுக்கு அப்புறமா தான் நீங்க எல்லாம் கஷ்டத்தை அனுபவிக்க போறீங்க அப்படின்னு சொன்னேன். அதற்கு பாபு எதுவுமே பேசவில்லை ஆனால் பாபுவின் அம்மா முகம் வாடி போய்விட்டது என்ன பாத்து ஏம்பா இப்படி அபசகுணமா பேசுற எங்களை என்னதான் பண்ண சொல்ற நீயே இதற்கு ஒரு தீர்வு சொல்லுப்பா அப்படின்னு கேட்டாங்க. அதற்கு நான் சொன்னேன் ஏம்மா நான் என்ன சொன்னாலும் கேப்பீங்களா அப்படின்னு கேட்டேன். அதற்கு அம்மாவும் நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன் நாங்க என்ன செய்யணும் அதை மட்டும் சொல்லுப்பா அப்படின்னு சொன்னாங்க. இப்போ நிலத்துக்கு எவ்வளவு கட்டியிருக்காங்க என்று அம்மாவிடம் கேட்டேன். அவங்க என்னபா ஒரு லட்சம் அட்வான்ஸ் கட்டி இருக்காங்க இன்னும் மூணு மாசம் கழிச்சு மீதிப் பணத்தை கட்டிட்டு கிரையம் பண்ணிக்கிறதா சொல்லி இருக்காங்கப்பா அப்படின்னு சொன்னாங்க. நான் உடனே அப்போ அந்த பணத்தை அவளுக்கு ரிட்டன் பண்ணிருங்க நாங்க நிலம் விக்கிறதா  இல்லன்னு சொல்லிருங்க அப்படின்னு நான் சொன்னேன். இது சரியா வருமா வேலு என்று பாபு என்னை பார்த்து கேட்டான். அவனிடம் நான் சொன்னேன் நிச்சயம் இது சரியா வரும் இந்த விஷயத்தை தப்பு பண்ண வாழ்நாள் முழுக்க நெனச்சி நெனச்சி வருத்தப்படுவது நீ மட்டும் தான், நான் இல்ல இது உறுதி அப்படின்னு அழுத்தம் திருத்தமாக சொன்னேன். நான் சொன்னதைக் கேட்டு பாபாவும் பாபாவின் அம்மாவும் ஒருவரை ஒருவர் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார்கள், சிறிது நேரம் கழித்து சரிப்பா நீ சொல்ற மாதிரியே அட்வான்ஸ் பணத்தை திருப்பி தந்துவிடலாம் என்று அம்மா சொன்னாங்க அதற்கு பாபுவும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் சம்மதம் என்பதுபோல் தலையை மட்டும் ஆட்டினான். பிறகு அண்ணே வேலை செய்யாதீங்க நிறுத்துங்க போதும் என மேஸ்திரிகளிடம் பாபு சொன்னதும் மேஸ்திரிகளும் வேலை செய்யவில்லை. எதுக்குடா இப்ப திடீர்னு வேலை செய்யகூடாதுன்னு சொல்ற அப்படின்னு கேட்டேன். நீ தானடா  சொன்னா வேலு! வீடு கட்டக் கூடாது அப்படின்னு அதனால் தான் வேலை செய்ய வேண்டாம்னு சொல்ற . டேய் முட்டாள் வீடு தான் கட்டக்கூடாதுன்னு கட்டடம் கட்ட வேணாம்னு சொல்லலையே என்று சொன்னேன். என்னடா வேலு! குழப்புற வீடு கட்டக் கூடாது ன்னு சொல்ற அப்போ கட்டடம் மட்டும் போட்டு என்ன லாபம் சொல்றா அப்படின்னு கேட்டான். டேய் இன்னும் ரெண்டு வரி கருங்கல் கட்டிடம் கட்டினால் வேலை முடிஞ்சது, இப்ப போய் கட்டிடம் காட்டாதீங்கசொன்னா நஷ்டம் யாருக்கு உனக்கு தான், அதுவே இப்போ கட்டடம் கட்டி வச்சா பின்னாளில் வீடு கட்டும் சூழ்நிலை வரும் அப்போ இந்த கட்டடத்தின் மேல் கட்டிக்கோ  இப்போ பாதியிலேயே நிறுத்தினா இதற்கான மொத்த செலவு உனக்கு நஷ்டம்தான் அதனால பேஸ்மென்ட் போட்டு வை இதுல என்ன தப்பு இருக்கு என்னமா நான் சொல்றது சரிதானே என்று அம்மாவிடம் சொன்னேன்,. அதற்கு அம்மாவும் தம்பி சொல்றது சரிதான் நாம இப்போ கட்டிடத்தை மட்டும் கட்டி முடிப்போம் என்னைக்குமே வீடு கட்டமலா போவோம் , மேஸ்திரி நீங்க வேலை செய்யுங்கப்பா ஏன் சும்மா நிக்கறீங்க கட்டடத்தை கட்டி முடிச்சிடுங்க பாதியிலே விட வேண்டாம் எனஅம்மாவும் மேஸ்திரிகளிடம் சொல்லவே மேஸ்திரிகளும் வேலை செய்யத் தொடங்கினார்கள்.ரெண்டு பேரும் வாங்க சாப்பிடுவீங்க என அம்மா அழைத்தது. இல்லமா நான் இப்பதான் சாப்பிட்டு வந்தேன்,பாபாவுக்கு மட்டும் போடுங்க அம்மா அவன் தான் வெயில் வேலை செய்றான் ரொம்ப பசியில் இருப்பான் அவனுக்கு சாப்பாடு போடுங்க என்று சாப்பிட மறுத்தேன். ஆனால் பாபு என் கையை பிடித்துக்கொண்டு நான் சாப்பிட்டுபோ என்றான் , இல்லடா நான் விளையாட போறே நீ வேலையெல்லாம் முடிச்சிட்டு சாயங்காலமா கிரவுண்டுக்கு வாடா என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன். நானும் கிரவுண்டுக்கு போய் சேர்வதற்குள் வெயில் அதிகமாயிருச்சு அங்க போய் பாத்தா கிரவுண்ட்ல ஒரு சிலர் மட்டும் தான் இருந்தாங்க, சரி சாயங்காலம் வந்து விளையாடலாம், இப்போ வீட்டுக்கு போய் ஒரு குட்டி தூக்கம் போடலாம் முடிவு செய்து வீட்டுக்குப்போய் நல்லா தூங்கிட்டேன். சாயங்காலமா தூங்கி எழுந்தேன், எழுந்ததும் முகம் எல்லாம் கழுவி விட்டு நேரா கிரவுண்டுக்கு. சென்றேன் அங்கே பார்த்தால் பாபு இல்லை, நானும் ஊர்க்கார பசங்களோட கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தேன். நாங்கள் எல்லோரும் விளையாடி முடித்த பிறகு பாபு என்னை பார்த்து சிரித்துக் கொண்டே வந்தான். வந்தவனிடம் நானும் என்னடா பாபு என்ன பாத்து சிரிசிட்டே வர என்ன பாத்தா காமெடியா இருக்கா என்ன? என்று கேட்டேன். அதற்கவன்  டேய்! அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா என்று சொன்னான். அப்புறம் எதுக்குடா என்ன பார்த்து அப்படி சிரிச்ச என அவனிடம் கேட்டேன். அப்படி இல்லடா வேலு நீ வந்துட்ட அதுக்கு அப்புறம்  வீட்டுகிட்ட வேலை செய்த மேஸ்திரி,சித்தாள் உன்ன பத்தி பேசி சிரிச்சாங்க. உன்ன பாத்ததும் அவங்க பேசினத நெனச்சேன் சிரிச்சேன் என்றான். அப்படினா நான் காமெடி பீஸ் தானே அர்த்தம் என்னவோ அப்படி எல்லாம் இல்லைன்னு சொன்னா, அப்போ அவங்க நான் வந்த பிறகும் என்ன நெனச்ச சிரிச்சா அதுக்கு அர்த்தம் என்ன ராஜா என்றேன். அதற்கு அவன் டேய் என்ன நடந்தது தெரியாம பேசாத, நீ வந்த பிறகு அங்க என்ன நடந்தது தெரியுமா என்று அடக்கமுடியாத சிரிப்புடன் என்னிடம்  கேட்டான். என்ன நடந்ததுன்னு நீ சொன்னாத் தானே எனக்கு தெரியும் என்றேன் . அதற்கு அவன் டேய் வேலு! நீ வந்த பிறகு மேஸ்திரி என்ன பார்த்து யாருப்பா அந்த பையன் அப்படின்னு என்கிட்ட கேட்டாங்க அதற்கு நானும் என் நண்பன் தான் சென்னையில வேலை பார்க்கிறான் என்றேன், அதுக்கு அந்த மேஸ்திரி அதனால்தான் இந்த பேச்சு பேசுறான் அப்படின்னு அவங்க எல்லாம் பேசி சிரிச்சாங்க , அவங்க எல்லாம் சிரித்ததை பார்த்தா அம்மா

வேலு அப்படி என்ன தாண்டா தம்பி சொன்னா இப்படி சிரிக்கிறீங்க எனக்கும் சொன்னா நானும் சேர்ந்து சிரிப்பேன் எனக்கும் சொல்லுங்க என்று கேட்டது. அதுக்கு நானும் அவன் என்னவோ சொன்ன மா எனக்கு என்ன சொன்னான்னு ஞாபகம் இல்லை அப்படின்னு சொல்லிட்டேன். ஆனா அங்க இருந்த சித்தாள் வேலை பார்த்த ஒரு பொண்ணு அம்மா அவங்க என்ன பேசினாங்கன்னு எனக்கு தெரியும்னு சொன்னாங்க அதுக்கு அருகிலிருந்த மேஸ்திரி முக்கியமா அந்த கவிதை சொல்லுமா அப்படின்னு சொன்னாங்க , அருமையான சித்தாளு ஏதோ வயக்காடு வானுயர வீடு அப்படி இப்படின்னு உன் கவிதைய சொன்னாங்க அது என்ன கவிதைன்னு எனக்கும் முழுவதும் ஞாபகமில்லை. அதுக்கு அப்புறமா ஒரு மேஸ்திரி அந்த பையன் சொல்றது சரிதா அம்மா இப்பவெல்லாம் பொண்ணு வீட்டுக்காரங்க மாப்பிள்ளை என்ன வேலை செய்றான் , கவர்மெண்ட் வேலையா,பிரைவேட் வேலையா கேக்குறாங்க அது மட்டுமா அந்தப் பையன் சொல்ற மாதிரி வயல் இருக்கிறாவன் போய் கேட்டா வேலையும் வேணும்னு சொல்றாங்க, வேலைக்கும் போய்க் கேட்டா விவசாய நிலம் வேணான்னு கேக்குறாங்க எங்கள மாதிரி மேஸ்திரியும் போய் பொண்ணு கேட்டா இதெல்லாம் ஒரு வேலையான்னு சொல்றாங்க அப்போ அவங்க பொண்ண யாருக்குத்தான் தருவாங்கன்னு தெரியல அப்படின்னு சொன்னாங்க. அதுக்கப்புறமா அம்மா அவர்கிட்ட அந்த தம்பி மட்டும் வராமல் இருந்திருந்தால் என் புள்ளையோட வாழ்க்கையே நாங்களே நாசம் செஞ்சி இருப்போம் ஏதோ கடவுள் தான் அந்த தம்பி உருவத்திலே வந்து என் புள்ளையோட வாழ்க்கையை காப்பாத்தி இருக்கு என்று எங்க அம்மா சொன்னாங்க அப்படின்னு பாபு சொன்னான். நான் கடவுள் எல்லாம் இல்ல, ஏதோ என்னுடைய கருத்தை தான் சொன்னேன் அது உங்க குடும்ப சூழலுக்கு சரின்னு பட்டுச்சு அந்த கருத்த நீங்க ஏத்துக்கிட்டாங்க அவ்வளவுதான் இதுக்கு போய் என்ன உடனே கடவுள் அப்படி எல்லாம் சொல்லக்கூடாது, அதே மாதிரி உனக்கு ஒன்னு சொல்றேன்

” இங்க பார்ரா பாபு இனிமே பொண்ணு பாக்க போற இடத்துல யாராவது வீடு இல்ல ,வேலை இல்லைன்னு சொன்னா நீ உடனே ஏன் விவசாயம் ஒருவேலையா தெரியலையா? இப்போ இருக்கிற வீடு வீடா தெரியலையா? அப்படின்னா நீங்களே ஒரு பத்து லட்சம் கடன் வாங்கி கொடுங்க அந்த கடனை நாளைக்கு நானும் உன் பொண்ணும். கட்டி முடிக்கிறோம் அப்படின்னு அவங்க முகத்தில் அடிச்சமாதிரி சொல்லு அப்படின்னு சொன்னேன். அதற்கு அவனும் அந்த மாதிரி பேசலாம் ஆனா அது தப்பு இல்லையாடா என்று அப்பாவியாக கேட்டான். டேய் பாபு….! அவங்க மட்டும் நீ செய்யற தொழில எவ்வளவு கேவலமா பேசுறாங்க, அப்போ நீயும் அவங்கள அவங்கள பேசுவதில்லை தப்பே இல்ல நீ தைரியமா பேசு அப்படின்னு சொன்னா அதுக்கு அவன் டேய் அப்படி எல்லாம் பேசுறது தப்புடா அவங்க பொண்ணு நல்லா இருக்கணும்னு நினைக்கிறாங்க , விவசாயம் பார்க்கிறவங்களுக்கு என்ன வருமானம் இருக்கு அவங்க எப்படி வாழ்வாங்க நாளைக்கு நம்ம பொண்ணு கஷ்டப்படும் அப்படின்னு பொண்ண பெத்தவங்க நினைக்கிறாங்க இதுல என்னடா தப்பு இருக்கு அவங்க பொண்ண தருவதும் தராமல் போவதும் அவங்க இஷ்டம் இது நம்ம போய் எப்படி தப்பா பேச முடியும் என்று பாபு என்னிடம் கேட்டான். டேய் அப்பா சாமி உன்ன மாதிரி என்னால பொறுமையா இருக்க முடியாது விவசாயம் செய்கிற உனக்கே மரியாதை இல்ல இதுல என்ன மாதிரி ஆளுங்க எல்லாம் போய் பொண்ணு கேட்டா என்ன நடக்கப் போகுதோ தெரியல என்றேன். உனக்கு என்னடா மாசம் ஆனால் போதும் நல்ல சம்பளம் வாங்குற உன்ன மாதிரி ஆளுங்க போய் கேட்டவுடனே தருவாங்க என்று சொன்னான். நீ வேற ஏன்டா சும்மா நேரம் காலம் தெரியாம காமெடி பண்ணிட்டு இருக்க ,இப்போ உன் கூட பேச நேரமில்ல நான் அடுத்த வாரம் வரேன் நீ மறக்காமல் உங்க நிலத்துக்கு கட்டின பணத்த திருப்பி தந்து விடு என்று சொன்னேன். அதற்கு அவனும் கட்டாயம் அட்வான்ஸ் பணத்தை திரும்ப தந்திடுவேன் ,ஆனா கடைசியா அந்த கவிதையை மட்டும் ஒரு முறை சொல்லிட்டு போறியா வேலு என்று கேட்டான். நானும் ஒன்றும் புரியாதவனாய் எந்த கவிதை என்றேன், அதற்கு அவன் காலையில் வீட்டுக்கு வந்தப்போ ஒரு கவிதை சொன்ன அதை சொல்லுடா என்று ஆசைய கேட்டான். டேய் அதுக்கு பேரு உங்க ஊர்ல கவிதையாடா ஏதோ என் வாயில வந்ததை சொன்னேன் அதைப் போய் நீ என்னடான்னா கவிதைன்னு சொல்ற , இது உனக்கே ஓவரா தெரியல என்று சொல்லி சிரித்தேன். நீ இப்போ கவிதை சொல்றியா? இல்லையா?, சொல்லு உரிமையுடன் சற்று சத்தமாகவே கேட்டான். நானும் ஏதோ நண்பன் ஆசையுடன் கேட்கிறானே என்று                                                                                        “வருங்கால மனைவிக்கு வயக்காட்ட வித்து வைரத்தால் ஆன வளவியே
வரதட்சணையாக தந்தாலும்..

நாளை உன் மனைவிக்கு வயிறு பசி என்று வந்தால் வைரத்தை உன்ன முடியாது, வயக்காட்டில் விளைந்த வைரம் போல் இருக்கும் வரகரிசியை தான் உன்ன முடியும்” என்று ஏதோ என் வாயில் வந்ததை உளறினேன். பாபுவும் அதைக் கேட்டவுடன் சூப்பர்டா…. சூப்பர்டா…… என்று சொல்லி கைதட்டி ஆரவாரம் செய்தான். டேய் எனக்கு நேரம் ஆகுது ,உன்கூட பேசிட்டு இருந்தா இப்படித்தான் காமெடி பண்ணுவ ,நான் நாளை காலை வேலைக்கு போக முடியாது நீ வீட்டுக்கு போ ராஜா நானும்  வீட்டுக்கு போறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.

வயக்காட்டை விற்று வருங்கால மனைவிக்காக வானுயர வீடுகட்டி வைத்தாலும்…               நாளை உன் ,க்கு பசி என்று வந்தால் கட்டிய வீட்டின் கல்லை உன்ன முடியாது…                                                                                                   

வருங்கால மனைவிக்கு வயக்காட்ட வித்து வைரத்தால் ஆன வளவியே வரதட்சணையாக தந்தாலும்- நாளை உன் மனைவிக்கு வயிறு பசி என்று வந்தால் வைரத்தை உன்ன முடியாது, வயக்காட்டில் விளைந்த வைரம் போல் இருக்கும் வரகரிசியை தான் உன்ன முடியும்”

                                                                                                                                                   இவன்

                                                                                                                                       இரா .மணிவண்ணன்

 

,

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply