வழியே வந்த தெய்வம்-the deity who came through (short story)

                                             வழியே வந்த தெய்வம்

  • வழியே வந்த தெய்வம்இளைஞன் ஒருவன் இருசக்கர வாகனத்தில் வேகமாக வீட்டிற்கு வருகிறான். வாகனத்தை நிறுத்தியவன், அதேவேகத்தில் வீட்டினுள் செல்கிறான். வீட்டினுள் இருந்த அவனுடைய அம்மா டேய்! ஏண்டா இவ்வளவு வேகமா வர்ற, மெதுவா வந்தா என்ன என்று கேட்கிறாள். இவன் பதிலேதும் சொல்லாமல், மாற்று உடைகளை பையில் எடுத்துக்கொண்டு அம்மா நான் கோவிலுக்கு போயிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்படுகிறான்.
  • நகரப் பேருந்து நிலையத்திற்கு சென்றவன் , அவன் போகவேண்டிய கோவிலுக்கு செல்லும் பேருந்திற்காக காத்துக் கிடக்கிறான். வெகு நேரம் கழித்து அவன் எதிர்பார்த்து இருந்த பேருந்தும் வருகிறது. பேருந்து நிற்பதற்கு முன்பே பயணிகள் எல்லோரும் பேருந்து படிக்கட்டின் முன்னே சூழ்ந்து கொள்கின்றார்கள் . இவனும் அடித்து பிடித்து ஜன்னலோர சீட்டில் அமர்ந்து கொள்கிறான். இரவு முழுவதும் சென்ற பேருந்து விடியற்காலை பேருந்து கோவில் செல்கிறது.

Dharmalingeshwar Malai Hill Temple | Astrogeography Blogகோவிலுக்கு சென்றவன், குளத்தில் குளித்து முடித்துவிட்டு, சாமியின் தரிசனத்தை காண கருவறையை நோக்கி செல்கிறான். இவனுக்கு முன் கட்டெறும்பு போல ஒருவர்பின் ஒருவராக நீண்ட தூரம் வரிசையில் நிற்கின்றனர். சில மணி நேரத்துக்கு பிறகு சாமியின் தரிசனத்தை பார்த்தவன், அவனுடைய பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஒரு சிறு கட்டு பணத்தை எடுத்து உண்டியலில் செலுத்திவிட்டு கையிலிருந்த பிரசாதத்தை மடித்து சட்டைப் பையில் வைத்துக் கொள்கிறான். அதன் பிறகு கோவிலுக்கு அருகே இருக்கும் ஒரு மரத்தடியில் அமர்ந்து ஓய்வு எடுக்கிறான்.

  • அவனுக்கு அருகே அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை பார்த்த இவன் அந்த வரிசையில் நின்று அந்த உணவை வாங்கி சாப்பிட்டுவிட்டு, கோவிலின் சிற்ப வேலைப்பாடு, அழகையெல்லாம் பார்த்து முடிக்கவும் மாலை பொழுது சாய்கிறது. கோவிலிலிருந்து மீண்டும் அதிகாலை வீடு திரும்புகிறான்.

 “காலை அவனுடைய நண்பனுக்கு கோவில் பிரசாதத்தை தருகிறான். அவனும் அதை வாங்கி பயபக்தியோடு அவன் நெற்றியில் வைத்துக்கொண்டவன், என்னடா! திடீர்னு கோயிலுக்கு எல்லாம் போயிட்டு வந்திருக்க என்ன விஷயம் என்கிறான். இவனும் சிறிய புன்னகையுடன் முதல் மாத சம்பளத்தை கோவில் உண்டியலில் போடுவதா அம்மா வேண்டி இருந்தாங்க, அதனாலதான் கோவிலுக்கு போயிட்டு வந்தேன் என்று சொன்னதும், அதற்கு அவனுடைய நண்பன் அப்போ முதல் மாச சம்பளத்தை கடவுளுக்கு காணிக்கை செலுத்திவிட்டு வந்துட்ட… ரொம்ப சந்தோசம், அப்புறம் வேற ஏதாச்சு கோவில்ல சுவாரசியம் இருந்துச்சா என்று கேட்கிறான். இவனும் ஒரு சுவாரசியமான விஷயம் எதுவும் நடக்கல ஆனா… நமக்கு சின்ன வயசுல பாடம் எடுத்த வாத்தியார பார்த்தேன் என்று சொன்னதும் அதைக்கேட்ட அவனுடைய நண்பன் அப்படியா…! எங்கடா பார்த்த, அவரிடம் போய் பேசினியா என ஆச்சரியத்தோடு கேட்கிறான். இல்லடா அவரைப் பார்க்கவே ஒரு மாதிரியா இருந்தாரு, கிட்டத்தட்ட பிச்சைக்காரன் மாதிரி பஸ் ஸ்டாண்ட்ல ஒரு ஓரமா உக்காந்துட்டு இருந்தாரு எனக்கு பாக்கவே சகிக்கல என்கிறான். அதைக் கேட்ட அவனுடைய நண்பனுக்கு கோபம் வந்துவிடுகிறது, அவர் அப்படி இருந்ததுனால, நீ அவரிடம் போய் பேசல அப்படித்தானே, டேய்! நீ சின்ன பிள்ளையில் மூக்குல ஊல ஒலிகிட்டு இருந்தாப்போ  அன்னைக்கு அவரு உன்ன பாத்து ஒதுங்கி நின்னு இருந்தா, இன்னிக்கி நீ இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியுமா, நீ… மட்டும் கோவில் உண்டியலில் போட்ட பணத்தில் கொஞ்சம் பணத்தில் அவருக்கு நல்ல துணியும், ஒரு வேளை உணவும் வாங்கி தந்து இருந்தாலே போதும். அவ்வளவு ஏன்டா! நீ இது எதுவுமே செய்யத் தேவையில்லை. ஐயா எப்படி இருக்கீங்க நான் உங்ககிட்ட படிச்ச முன்னாள் மாணவன் அப்படின்னு சொல்லி இருந்தாலே போதும்,  நீ இப்படி ஒரு நல்ல நிலைமையில் இருப்பதை பார்த்ததும் அவரு அடையும் சந்தோஷம் இருக்கும் பாரு அந்த சந்தோஷத்துக்கு நீ கோடி ரூபாய் கோட்டி கொடுத்திருந்தாலும் அந்த மனுஷனுக்கு மனசு நிறையாது. நீங்க எப்படி இருக்கீங்க என்று கேட்கும் அந்த ஒத்த சொல் போதும்டா,  நீ என்னடான்னா இப்படி வழியே வந்த தெய்வத்தை விட்டு விட்டு வானுயர கோபுரத்திலும், மலை உச்சியில் உள்ள தெய்வத்தையும் பாத்துட்டு வந்து இருக்கே உன்னை எல்லாம் என்ன செய்யலாம் என்று கடும் கோபத்துடன் கேட்கிறான் . உடனே இவனும் அப்போ நான் இந்த நிலைமைக்கு வர அவர் தான் காரணமா என்கிறான்.அதற்கு அவனுடைய நண்பன் டேய்! அவர் மட்டும் இல்ல உனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த அத்தனை ஆசிரியர்களும் தான் காரணம் ஆனால் உன் கண்ணில் நலிந்த நிலையில் இருந்த இவருக்கு நீ செய்யும் உதவி தெய்வத்திற்கு செய்ததுபோல் இருந்திருக்கும்னு சொல்றேன் அவ்வளவுதான், இதில் நீ கோவப்பட ஒன்னுமே இல்ல என்று சொல்கிறான். அதற்கு இவனும் அப்போ நான் கோவில் போனது தப்புன்னு சொல்ல வர அப்படித்தானே என்கிறான். அதற்கு அவனுடைய நண்பன், டேய்! கோவிலுக்கு போவதும், போகாமல் இருப்பதும் உன்னுடைய இஷ்டம், நமக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியருக்கு எதுவும் உதவி செய்யாமல் வந்துட்ட அதுதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு, இதுக்கு ஏன்டா நீ இவ்ளோ கோவப்படுற, உனக்கே தெரியுது நாம தப்பு பண்ணிட்டோம் அப்படின்னு, விடு திரும்பவும் அவரை பார்க்கும் வாய்ப்பு கிடைச்சா நல்லபடியா ஏதாவது செய்யலாம் என்கிறான். இவனும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா கட்டாயம் செய்யலாம் என்கிறான்”.

  • அவர்கள் எண்ணம் போல் ஒரு வாரத்திலேயே அவரைக் காணும் அதிர்ஷ்டம் இவர்களுக்கு கிடைக்கிறது. அவரைப்பார்த்து இருவரும் அறிமுகம் செய்துகொண்டு , அவரிடம் நலம் விசாரித்ததோடு இல்லாமல் இருவரும் சேர்ந்தே அவருக்கு முடி திருத்தம் செய்து நல்ல உடைகளையும் அணிந்து அவரை முதியோர் காப்பகத்தில் சேர்த்துவிடுகிறார்கள்.அதன் பிறகு அவர்களும் மனநிறைவுடன் வீடு திரும்பினார்கள்

 

 

 

 

Leave a Reply