சித்தியோட சூழ்ச்சி(short story)

                                              மாற்றாந்தாய் பிள்ளை

ஒரு ஊர்ல, ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் அவருடைய பெயர் குப்புசாமி. அவருக்கு ஏகப்பட்ட சொத்து, அதுமட்டுமில்லாமல் அவருக்கு இரண்டு மனைவிகளும் உண்டு. அதில் மூத்த மனைவிக்கு ஒரு ஆண் பிள்ளை, அவன் பெயர் குணா.இரண்டாவது மனைவிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள், அவர்கள் பெயர் குணசீலன் இன்னொருவன் பெயர் குருநாதன்.
முதல் மனைவியின் மகன் குணா ஊரில் சொந்த தொழில் செய்து வருகிறான். இரண்டாவது மனைவியின் பிள்ளைகளில் ஒருவன் விவசாயம் செய்கிறான். இன்னொருவன் ஊர் சுற்றுவதும், ஊரில் வம்பு இழுப்பதுமாக இருக்கிறான்.
இதில் இரண்டாவது மனைவி அவர்கள் பிள்ளைகளைவிட மூத்த மனைவி பிள்ளை குணாவின் மீது அதிக பாசத்துடன் இருக்கிறாள். இது குணாவின் அம்மாவுக்கு மட்டுமல்ல அந்த ஊரில் இருப்பவர்களுக்கு கூட ஆச்சரியம்தான், ஏனெனில் அவனுக்காக தினந்தோறும் அவனுக்கு பிடித்த உணவு சமைப்பதில் தொடங்கி வீட்டில் எல்லோரும் குணா சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்பதுபோல் அவனுக்கு பலமாகவே இருப்பார். குணாவும் அவன் தாயைவிட சித்தி மீது அதிக பாசமுடன் இருந்தான். இன்னும் சொல்லப் போனா அவன் சித்தியை அம்மா என்றுதான் கூப்பிடுவான்.
Old Man Sitting India High Resolution Stock Photography and Images - Alamyஒரு நாள் குணா வேலை விஷயமாக வெளியூருக்கு சென்றிருந்தான். அந்த ஊரில் ஐந்தாறு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என எல்லோரும் சேர்ந்து ஒரு இளைஞரை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்த குணா அருகிலிருந்தவர்களிடம் என்னையா இப்படி போட்டு அடிச்சுக்கிட்டு இருக்காங்க எல்லோரும் இப்படி பாத்துட்டு சும்மா இருக்கீங்க பொய் என்னான்னு கேக்க மாட்டிங்களா என்று கேட்கிறான். அதற்கு அங்கிருந்த முதியவர் ஒருவர் அந்தப் பயலுக்கு அப்படி தான் ஆகணும் அப்பவே சொன்னேன் கேட்டனா கேக்காம அவன் இஷ்டத்துக்கு ஆடி விட்டான் இப்ப அனுபவிக்கிறான், அனுபவிக்கட்டும் விடு என்கிறார். இருந்தாலும் ஒருவனை போட்டு இந்த அடி அடிக்கிறார்களே என்று மனம் கேட்காமல் அடிப்பதை தடுக்கிறான். ஆனால் அவர்களோ நீ யாருடா, எங்க சண்டையிலே வந்து தலையிட ஒழுங்கா போயிரு என்று தகாத வார்த்தையில் பேசி திட்டுகிறார்கள். குணா அதற்கெல்லாம் பயப்படாமல் அவர்களிடமிருந்து அடி வாங்கியவனை மீட்டு அங்கிருந்து குட்டி செல்கிறான். பிறகு டவுனில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு கூட்டிச்சென்று அவனுக்கு பசியாற்றி அங்கிருந்து மீண்டும் அவருடைய வீட்டுக்கு அழைத்துக்கொண்டு செல்கிறான். போகும் வழியில் குணா அவனிடம் நண்பா உங்க பேரு என்ன என கேட்கவும், அவனும் என் பெயர் நாகேஷ் என்கிறான். இவனும் என் பெயர் குணா என்று அறிமுகம் செய்துகொள்கிறான்.
மீண்டும் நாகேஷின் ஊருக்குள் குணாவின் இருசக்கர வாகனம் நுழைந்ததும் அங்கிருந்த ஆட்கள் எல்லாம் இவர்களையே பார்க்கின்றனர். உடனே நாகேஷ் குணாவிடம் நண்பா வண்டியை ஊருக்குள் விடாதீங்க என்னை அடிச்ச மாதிரி உங்களை அடிச்சுடுவாங்க, வாங்க நாம வேற இடத்துக்கு போலாம் என்று சொல்லி குணாவை தனிமையான ஒரு இடத்துக்கு போகும்படி சொல்கிறான்.
“குணாவும் ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்திவிட்டு, இப்ப சொல்லுங்க நண்பா எதுக்கு அத்தனை பேர் சேர்ந்து உன்னை அடிக்கிறாங்க, உனக்கு யாரும் இல்லையா என பரிதாபமுடன் கேட்கிறான். அதற்கு நாகேஷ்ம் அம்மா இல்ல, அப்பா இருக்காரு, சித்தி இருக்காங்க அவங்க பிள்ளைங்க இருக்காங்க என்று அழுகையுடன் திக்கித்திக்கி பேசுகிறான். அப்போ அவளாவது வந்து கேட்டுக் கேட்டிருக்கலாமே என்று குணா கேட்க. அதற்கு நாகேஷ் அடிச்சதே அவங்கதான் என்று சொல்லி அழுகிறான். அப்போ இது உங்க குடும்ப சண்டையா என குணாவும் ஆச்சரியமுடன் கேட்கிறான். இவனும் ம்.. ம்ம் ….. என்று தலையை மட்டும் ஆட்டினான்.சரி நண்பா இப்படி உன்ன போட்டு இந்த அடி அடிக்கிறார்களே அப்படி நீ என்ன தப்பு செஞ்ச சொல்லுங்க நண்பா என்று கேட்கிறான். நாகேஷ்ம் புன்சிரிப்புடன் நான் செய்த தவறில் எத உங்ககிட்ட சொல்லட்டும் சொல்லு நண்பா, ஏன் இப்படி பாக்கறீங்க, இவன் ஒருவேள பொறுக்கியா இருப்பானோ அப்படி நினைக்கிறீங்களா என குணாவிடம் கேட்கிறான். அதற்கு குணாவும் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை நண்பா என்ன தப்பு செஞ்சேன்னு நீ சொன்னா தான் எனக்கு தெரியும் என்று கேட்கவும், நாகேஷும் அவனுடைய கதையை இப்படி தொடங்குகிறான், எங்க அப்பாவுக்கு ரெண்டு சம்சாரம் நான் முதல் மனைவியோட பையன் அங்க என்ன அடிச்சவன் என் சித்தி, தம்பி , தம்பி பொண்டாட்டி, அப்புறம் அவனுடைய மச்சான் இவங்க எல்லோரும்தான் என்ன அடிச்சது.” இன்னைக்கு என்ன இந்த அடி அடிக்கிறவங்க ,கொஞ்ச நாளுக்கு முன்னாடி என்னோட சித்தி என்ன அவங்க புள்ளைய விட என்மேல் அதிக பாசமா இருந்தாங்க, அப்போ நானும் எங்க அம்மாவை விட சித்தி தான் முக்கியம் அப்படின்னு எங்க அம்மாவை சரியா பாத்துக்கல. ஒரு நாள் என்னுடைய சித்தி நகையை எங்க அம்மா திருடியதாக என்னையும் நண்பா வச்சிட்டாங்க, நானும் எங்க அம்மாவை தகாத வார்த்தையிலும், திருடி எனவும் திட்டி விட்டேன். எங்க அம்மாவும் பெத்த புள்ளையே இப்படி பேசி விட்டானே என தற்கொலை செஞ்சிட்டாங்க, ஆனா எனக்கு அதுக்கு அப்புறம் தான் தெரிய வந்தது , இது எல்லாமே என்னோட சித்தி போட்ட நாடகம் அப்படின்னு சொல்லும் போதே நாகேஷுக்கு அடக்கமுடியாத அழுகை வருகிறது. உடனே குணாவும் நாகேஷ் பார்த்து, ஆமா! இதையெல்லாம் உங்க சித்தி ஏன் இப்படி செய்யணும், இதில் என்ன லாபம் அவங்களுக்கு என்று கேட்கவும். அதற்கு நாகேஷ் எங்க சித்தியோட திட்டப்படி எங்க அம்மா செத்துட்டா நான் அனாதை ஆயிடுவேன், அவங்க ஆசைப்பட்ட மாதிரி அனைத்து சொத்தும் அவங்க மகனுக்கு ஆயிடும், அதுக்கு முதலில் எங்க அம்மா சாகணும் அதை என்ன வச்சியே காலி பண்ணிட்டாங்க என்கிறான். நண்பா சட்டப்படி பார்த்தா நீ முதல் மனைவியோட புள்ள உனக்கு முழு உரிமை இது எல்லாம் தெரியாதா, நீதான் மூத்தவன் அவங்க இரண்டாவது சம்சாரம் அவங்களுக்கு சட்டப்படி நீயா பார்த்து ஏதாவது செஞ்சா செய்யலாம் அவ்வளவுதான் நீ சட்டப்படி ஜெய்கபாரு ,அவங்க உன்ன அடிச்சா பயந்து விடாதே என்கிறான். அதைக்கேட்டு சிரித்த நாகேஷ் சட்டத்தை வெச்சிகிட்டு என்ன செய்ய மெஜாரிட்டி அவங்க தானே இருக்காங்க,அப்போ இந்த ஊர்ல அவங்க சொல்றதுதான் நடக்கும். நண்பா இதுல இன்னொரு விஷயத்தை உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன், அப்பவே ஒரு பெரியவர் என்னிடம் டேய்! உன்ன பெத்தவள விட உன் சித்தி அதிக பாசமா இருக்கானா அதுக்கு பின்னாடி ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கு பார்த்து சூதனமா இருந்துக்கோ அப்படின்னு சொன்னாரு நான்தான் நம்ம சித்தி என்ன பண்ணிட போறாங்க அப்படின்னு நம்பிட்டேன். ஆனா! இப்போ உணருகிறேன். வயதில் மூத்தவர் அவருக்கு உள்ள அனுபவத்தில் இருந்து ஏதோ தெரிஞ்சது எனக்கு சொன்னாரு, அதை நான்தான் புரிஞ்சுக்கல அதற்கான தண்டனையை தான் இப்போ அனுபவிக்கிறேன் என குணாவிடம் போழம்புகிறான். குணாவும் சரி நண்பா ஏதாவது பிரச்சனை அப்படின்னா இந்தாங்க என்னுடைய நம்பர், இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு போய்ட்டு வரேன் என்று சொல்லிவிட்டு புறப்படுகிறான்.”
குணாவுக்கு மனதில் ஏதோ ஒரு குழப்பம் நாகேஷ் சொன்னதை மீண்டும் ஒரு முறை நினைத்து பார்க்கிறான். அப்பொழுதுதான் அவனுக்கு நம்மையும் இப்படித்தானே நம்ம சித்தி பாத்துக்கங்க ,ஒருவேளை அதுக்கு பின்னாடியும் இதுபோல ஒரு சூழ்ச்சி இருக்குமோ என்று அவன் மனதில் சந்தேகம் எழுகிறது.
குணா அதன் பிறகு அவனுடைய சித்தியின் நடவடிக்கைகளை ஒற்று கவனிக்கிறான். அவன் சந்தேகப்பட்டது போல ஒரு நாள் அவனுடைய சித்தி பையன் குணசீலன் அவனுடைய சித்தியிடம் சென்று என்னம்மா! எப்ப பாத்தாலும் குணாவுக்கு அதிக பாசமா பாக்கறீங்க, ஆனா நம்ம தம்பி குருநாதனே எப்ப பாரு திட்டிகிட்டே இருக்கீங்க அப்போ உங்க பிள்ளைகளை விட அவன் தான் முக்கியமா போயிட்டானா என்று கேட்கிறான். அதற்கு குணாவின் சித்தியோ டேய் முட்டாள்! நான் என்ன லூசா, இந்த மொத்த சொத்துக்கும் முதல் வாரிசு அவனும் அவனுடைய அம்மாவும்தான் அப்போ அவங்க அம்மாவை முதலில் அவன்கிட்ட இருந்து பிரிக்கணும், அம்மா இல்லாத அவன் அதுக்கப்புறம் நமக்கு அடிமை என்று சினிமாவில் வரும் விவகாரமான பெண் போல் பேசுகிறாள். அதைக்கேட்டு குணசீலன் அப்போ அதுக்காகத்தான் அப்படி அவ மேல பாசமா இருக்கிற மாதிரி நடிக்கிறியா என்று கேட்கிறான். இதையெல்லாம் மறைந்திருந்து பார்த்துக்கொண்டு இருந்த குணா அன்று முதல் அவர்களின் உண்மை முகம் தெரிந்தது.
Tamilnadu Village High Resolution Stock Photography and Images - Alamyஅப்பொழுது அவன் நினைத்துப் பார்க்கிறான் ஒருவேளை நான் நாகேஷ் -ஐ சந்திக்காமல் இருந்திருந்தால் நாமும் நம்ம அம்மாவை இழந்திருப்போம் என்று தோன்றுகிறது. அதன் பிறகு அவனுடைய அம்மாவின் மீது அதிக பாசமுடன் இருக்கிறான் , நல்லபடியாக கவனித்துக் கொள்கிறான்.

இரா. மணிவண்ணன்

Leave a Reply