வாலிப வயது(teen age)-short story

                          வாலிப வயது

  • என்னுடன் வேலை பார்க்கும் எங்க ஊர்க்காரர பையன் பெயர் சுகுமார், அவனை நான் வேலை செய்யும் கம்பெனியிலே ஒரு இரண்டு வாரத்துக்கு முன்பு தான் வேலைக்கு சேர்ந்து விட்டேன்.நானும் அவனும் ஒரே வாடகை வீட்டில் தங்கி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு நாள் நான் ரூமில் டிவி பார்த்துக்கொண்டு இருக்கும்போது, சுகுமார் போனிலிருந்து அழகான காதல் பாடல் ஒன்று ஒலித்தது.போனை எடுத்து பார்த்தாள் அவனுடைய அம்மா போன் பண்ணியிருந்தாங்க. உடனே நான் பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்த அவனிடம், டேய்! அம்மா போன் பண்ணி இருக்காங்க நான் பேசட்டுமா என்று கேட்டேன். அதற்கு அவன், மறுப்பேதும் சொல்லாமல் பேசுடா என்றான். உடனே நானும் அலைபேசியில் உள்ள அவனுடைய அம்மாவிடம்  சொல்லுங்கம்மா நான் அவனுடைய நண்பன் தீரன் பேசுகிறேன், அவன் பாத்ரூமில் குளித்துக் கொண்டு இருக்கிறான், அவனுடன் பேச வேண்டுமா கொஞ்ச நேரம் கழித்து கூப்பிடுங்கம்மா என்றேன். அதற்கு அம்மாவோ ஏன்பா நீயும் என் பிள்ளை தானே என்ற அம்மா, அப்படியே பேசத் தொடங்கினார். வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். அப்பொழுது குளியலறையிலிருந்து குளித்துவிட்டு வந்த சுகுமார், என்னடா! என்ன சொல்றாங்க எங்க அம்மா என்று கேட்டான். நானும் இந்தாடா அம்மா உன்னிடம் தான் ஏதோ பேச வேண்டுமாம் என்று அலைபேசி அவனிடம் தந்தேன்.ஆனால் அவனோ போனை வைடா நான் அப்புறமா பேசுகிறேன் என்று சொன்னதும், நானும் அலைபேசியை விட்டேன்.
  • என்னருகே அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தான்.அப்பொழுது ண்டும் அவனுடைய அம்மாவிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது, இவன் தொடர்பை துண்டித்துவிட்டு டிவி பார்த்து கொண்டிருந்தான். நான் அவனிடம் ஏன்டா! அம்மா போன் பண்ணாங்க நீ பேசவேஇல்ல, ஏன் ரெண்டு பேருக்கும் ஏதாவது சண்டையா என்று கேட்டேன். அவன் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா, ஏண்டா அப்படி கேக்குற அம்மா ஏதாவது சொன்னாங்களா என்று என்னிடம் கேட்கவும், நானும் இல்லடா! அம்மா நீ எப்படி இருக்கன்னு கேட்டாங்க அவ்வளவுதான் என்று சொன்னேன். உடனே அவன் அவ்வளவுதானா, வேற ஏதும் சொல்லலியே என்று கேட்டுவிட்டு அமைதியாகி விட்டான்.
  • அதன் பிறகு கொஞ்ச நேரம் கழித்து அவனே இல்லடா ஊர்ல அம்மா கூட சண்டை போட்டுட்டு வந்துட்டேன், அதான் அம்மா கூட பேசல அதைப்பற்றி உன்னிடம் ஏதாவது சொன்னாங்களா என்று என்னிடம் கேட்டான். அதைப்பற்றி எதுவும் சொல்லல ,அவன் கொஞ்சம் கோபக்காரன் யாரிடமாவது சண்டை போடப் போறான் பத்திரமா பாத்துக்கோ என்று சொன்னாங்க, சரி அம்மா கூட எதற்கு சண்டை போட்ட என்று நான் கேட்டேன். அது ..அது… ஒன்னும் இல்லடா…. என ராகம் இழுத்தான். உடனே நான் என்னடா ராகம் இழுக்குறர, என்ன நடந்துச்சு சொல்லுடா என்றேன்.

‘ பிறகு அம்மாவுக்கும் மகனுக்கும் நடந்த சண்டைக்கான காரணத்தை கதையாக இப்படி தொடர்ந்தான். நான் இந்த வேலைக்கு வருவதற்கு முன்னாடி எனக்கு கல்யாணம் பண்ணிவைக்க சொல்லி தினமும் கேட்பேன்.ஆனால் அம்மாவோ உனக்கு என்ன வயசு ஆயிடுச்சி, படிச்சு முடிச்ச உடனே கல்யாணம் பண்ணி வைக்க சொல்ற.முதல்ல ஒரு நல்ல வேலைக்குப்போ, இரண்டு வருடம் முடிஞ்ச பிறகு பாக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு இருந்தாங்க, நானும் எப்போ கேட்டாலும், எங்க அம்மாவும் எப்ப பாரு இதையே சொல்லிட்டு இருந்தாங்க ,அதுக்கப்புறம் ஒரு நாள் கையில கிடைச்சது எடுத்து எங்கம்மா மண்டையில் அடித்து விட்டேன் என்றான். என்னடா சொல்ற அம்மாவோட மண்டையை ஓடித்துவிட்டுத்தான் இந்த வேலைக்கு வந்தியா? அதுக்கப்புறம் என்னாச்சு! அம்மாவுக்கு ரொம்ப அடியா என்று அவனிடம் கேட்டேன். அதற்கு அவன் எள்ளளவும் வருத்தம் இல்லாமல், அதுக்கப்புறம் என்ன ஆகும் அடிச்ச அடியில ஆறு தையல் போட்டிருக்காங்க என்றான். அப்போ உங்க அம்மாவை அடிச்சி மண்டைய ஒடிச்ச பிறகுதான் என்கிட்ட வேலை இருந்தா சொல்லுடா என்று கேட்டு இருக்க, ம்.. ம் ..! அதுக்கப்புறம் என்ன நடந்துச்சு சொல்லுடா என்றேன். அதுக்கப்புறம் என்ன நடந்தது விஷயம் எங்க மாமா காதுக்கு போகவே அவருக்கும் எனக்கும் சண்டை, அவர் ஒரு பக்கம் நீ எதுக்குடா எங்க அக்காவ  அடிச்ச அப்படின்னு கேக்க, நான் எங்க அம்மாவ தான் அடிச்சேன் அப்படின்னு நான் சொல்ல, இதுல எங்க அம்மா ஒரு பக்கம் இன்னும் உங்க மாமாக்கு கல்யாணம் ஆகல, அதுக்குள்ள உனக்கு என்னடா கல்யாணம் அப்படின்னு அவங்க ஒருபக்கம் பேச மொத்தத்துல பெரிய சண்டையா ஆச்சு, அதுக்கு அப்புறமாதான் இங்க இருந்தா இப்படித்தான் இருக்கும் எங்கயாவது வேலைக்கு போகலாம்னு முடிவு பண்ணி உன் கிட்ட வந்தேன் என்று சொல்லி முடித்தான். ஆக.. மொத்தம் வீட்ல ஒரு கச்சேரி வச்சிட்டு தான் வந்துருக்க. சரி அதெல்லாம் இருக்கட்டும், உங்க அம்மா சொன்ன மாதிரி இப்ப என்ன உனக்கு கல்யாணம், ஒருவேளை உங்க மாமாவுக்கு பொண்ணு பாத்து அலையற மாதிரி நாளைக்கு நாம கூட அலையவேண்டியதா இருக்கும்னு நினைச்சுட்டியாடா என்று நான் கேட்டதற்கு அவன் சிரித்துக்கொண்டே பின்ன என்னடா இந்த காலத்துல கல்யாணம் ஆகுது அப்படின்னாவே அதிசயமா இருக்கு, எங்க மாமாவுக்கு பொண்ணு பாத்து கல்யாணம் பண்றதுக்குள்ள காலாவதி ஆகி விடுவார் போல இருக்கு.ஓரளவுக்கு நல்ல வேலையில் இருக்கிற அவருக்கே இன்னும் எங்க தாத்தா பொண்ணு பாக்குறன்னு அலைந்துகிட்டு இருக்காரு.இதுல நான் என்ன செய்ய என்று சொல்லி சிரித்தான். எனக்கும் அவன் சொன்னது சரி என்று தான் பட்டது.இந்த காலத்துல, பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணுவதே பெரிய வேலையா போச்சு போல என்று சொல்லி சிரித்துவிட்டு இருவரும் டிவி பார்க்க தொடங்கிவிட்டோம்.

அதன் பிறகு நாட்கள் நகர்ந்து ஓடியது, சுகுமாருக்கு மாத சம்பளம் வந்தவுடன் அவன் நடவடிக்கையில் மாற்றம் வர தொடங்கியது. கம்பெனியில் பணி புரியும் இளம் பெண்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. அதன்பின்பு அவர்களோடு ஊர் சுற்றுவதும், ஜாலியாக இருப்பதுமாக இருக்கிறான். ஒரு நாள், நான் அவன் செய்வது எல்லாம் தப்பு என கேட்கவே அவன் மீது கோபப் பட்டான்.ஒரு கட்டத்தில் எனக்கும் அவனுக்கும் வாக்குவாதம் முற்றி நான் அவனை ரூமை விட்டு வெளிய போடா என திட்டி வெளியே அனுப்பிவிட்டேன் . அதன் பிறகு அவனும் வேறு எங்கோ போய் தங்கி வேலை பார்த்தான். இங்கிருந்து போன பின்பு அவனுடைய நடவடிக்கைகள் குடிப்பதும் பெண்களோட உல்லாசமாக இருப்பது என இன்னும் மோசமாக மாறியது.

அதுக்கு அப்புறம் ரொம்ப நாள் கழித்து நான் ஊருக்கு போயிருந்தேன். அப்பொழுது சுகுமாரின் அம்மாவை பார்த்தேன், அவங்க அம்மா என்னிடம் எங்கப்பா எங்க பையன் ஊருக்கே வரல என்று கேட்டார். நானும் நடந்ததையெல்லாம் சொன்னேன். அதைக் கேட்ட அவங்க அம்மா, இப்ப கல்யாணம் பண்ணா கஷ்டப்படுவானே அப்படின்னு தானே ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணி வைக்கிறன்னு சொன்னேன். இப்படி பண்ணுவான்னு தெரிஞ்சிருந்தா அப்பவே கல்யாணம் பண்ணி வச்சிஇருப்பேனே என தலையை தலையை அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டார். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை அந்த அம்மா அலுவலகத்தை பார்த்த எனக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு. இப்படி அப்பா இல்லாத புள்ளயா எந்த கஷ்டமும் தெரியாமல் வளர்த்தாங்க. ஆனா, அவன் என்னடான்னா பொறுக்கித்தனம் பண்ணிட்டு திரிகிறான் என்று நினைத்தேன். அதன் பிறகு குமாரின் அம்மாவிடம் ஆறுதலாக என்ன பேசுவது என்று தெரியாமல், ஏதோ என் மனதில் பட்டது சொல்லிவிடலாம் என்று அவங்க அம்மாவை பார்த்து இதோ பாருங்க அம்மா, அவன் கல்யாணம் பண்ணி வச்சா கஷ்டப்படுவாங்க அப்படின்னு நீங்க நினைச்சீங்க, ஆனா அவன் கல்யாணம் பண்றது ஜாலியான ஒரு விஷயமா பாக்கறான். அதனால இப்போ அவன் சொல்ற மாதிரியே கேளுங்க, ஏன்னா! அங்கே இருந்தானா அவன் வாழ்க்கையே வீணாப் போயிடும். அதனால அவனுக்கு பேசாம நீங்க கல்யாணம் பண்ணி வச்சிருங்க,இல்லனா அவன அங்கிருந்து இங்கே வரவைக்க முடியாது என்று சொன்னேன். அதைக்கேட்டு, விம்மி விம்மி அழுத அவனுடைய அம்மா, என்னப்பா சொல்ற அப்போ அவன்… ஊருக்கு மாட்டானா…. என்று கேட்டார். அதான் சொன்னேனே அவன் சொன்ன மாதிரி அவனுக்கு கல்யாணம் பண்ணி வைங்க அவன் இங்கேயே இருப்பான் என்று சொன்னேன்.

அதுக்கு அப்புறமா சுகுமாரின் அம்மாவும் அலைந்து திரிந்து ஒருவழியாக ஒரு பெண்ணை மணமுடித்து வைக்கிறாங்க. அவனும் ஊருக்குள்ளே ஒரு சிறிய பினான்ஸ் கம்பெனில வேலை செய்கிறான். மாதங்கள் செல்ல செல்ல “இல்லற வாழ்க்கையில் இன்பம் சில நாள் துன்பம் பல நாள்” என்பதை உணர்கிறான்’.

 

இரா. மணிவண்ணன்

 

 

 

 

Leave a Reply